பொய்ப் பிரச்சாரம் | உண்மை | ஆதாரம் |
---|---|---|
மூன்றாவது கட்டாய மொழி இந்திதான். | அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் மொழியே 3வது மொழியாக இருக்கும். | பிரிவு 4.13 |
குழந்தைகளின் கற்றல் திறன் குறையும். | சிறுவயதில் பல மொழிகள் படிப்பதால் மாணவர்கள் அறிவாற்றல் பெறுவார்கள் என அமெரிக்காவின் தேசிய சுகாதார ஆராய்ச்சி நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது. தாய்மொழிக் கல்வியை அடிப்படையாக கொண்ட பன்மொழி கல்வி அவசியம் என்று யுனெஸ்கோ கூறுகிறது. |
https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC5662126/#:~:text=Far%20from%20the%20stereotype%20that,and%20to%20new%20learning%20itself
https://www.unesco.org/en/languages-education/need-know |
3 மொழிகள் கற்பது குழந்தைகளுக்கு மேலும் சுமையாக இருக்கும். | சிறுவயதில் பல மொழிகளை படிப்பதால் மாணவர்கள் அறிவாற்றல் பெறுவார்கள் என அமெரிக்காவின் தேசிய சுகாதார ஆராய்ச்சி நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் சுமார் 56 லட்சம் குழந்தைகளுக்கு பல மொழிகள் கற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதே இதற்கு ஆதாரம். |
https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC6168086/#:~:text=There%20is%20no%20credible%20evidence,the%20cognitive%20benefits%20of%20bilingualism https://op.europa.eu/en/publication-detail/-/publication/e0f69418-d915-11ed-a05c-01aa75ed71a1/la |
இந்தி பயிற்றுவிக்கும் மொழியாக இருக்கும். | பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு வரை தாய்மொழி வழி கல்வி கட்டாயம் வழங்கப்படும். 8 ஆம் வகுப்பு வரை தாய்மொழி வழி கல்வி கற்க ஊக்குவிக்கப்படும். | பிரிவு 4.11 |
பாஜக பின்வாசல் வழியாக இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை கொண்டு வர முயற்சிக்கிறது. | மாணவர்கள் விருப்பத்திற்கேற்ப, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா, உள்ளிட்ட இந்தியாவின் 22 அதிகாரபூர்வ மொழிகளில் படிக்க தேசிய கல்வி கொள்கை வாய்ப்பு வழங்குகிறது. மேலும், உயர்நிலைப்பள்ளி அளவில் பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், ஜப்பான் மற்றும் ரஷ்ய மொழிகளையும் மாணவர்கள் கற்கலாம். |
பிரிவு 4.18 |
புதிய கல்வி கொள்கை 2020, தமிழ் அடையாளத்திற்கே அச்சுறுத்தல் | தொடக்கப்பள்ளி முதலே, அந்தந்த மாநிலங்களின் கலாச்சாரம், பாரம்பரியம், இலக்கியங்களை உள்ளடக்கிய கல்வியே மாணவர்களுக்கு வழங்கப்படும் என தேசிய கல்வி கொள்கை உறுதி அளிக்கிறது. தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய செம்மொழிகளின் இலக்கியங்களைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்ல பாடத்திட்டங்களில் சேர்க்கப்படும். | பிரிவு 22.3 |
தமிழ்நாட்டின் மொழியியல் பாரம்பரியத்தை இழப்போம் | அனைத்து மாநிலங்களும், தங்கள் பகுதியின் சிறப்புகளை கூறும் பாடத்திட்டத்தை தயாரிப்பதோடு, அனைத்து மாநில மொழிகளிலும் பாடப்புத்தகங்கள் இருப்பதை உறுதி செய்ய தேசிய கல்வி கொள்கை வழிவகுக்கிறது. | பிரிவு 4.32 |
தொழில் கல்வியை ஊக்குவிப்பது, ஜாதி சார்ந்த வேலைகளை ஊக்குவிக்கவே வழிவகுக்கும் | தொழிற்கல்வி என்பது உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. இதன் அடிப்படையில், திமுக அரசு கூட மேக்கப், முடி திருத்துதல், தையல், எம்ப்ராய்டரி, கைவினைஞர், வீட்டு வேலை, கட்டுமான வேலை, தச்சு வேலை உள்ளிட்டவற்றிற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாநில கல்வி கொள்கைக்காக திமுக அரசால் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு கொடுத்த அறிக்கையில், பக்கம் எண் 19ல், கடலோர பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு கடல், கப்பல் தொடர்பான பாடத்திட்டங்கள் கொண்டுவரப்படும் என கூறப்பட்டிருந்தது. இது ஜாதி சார்ந்த வேலைகளை ஊக்குவிக்காதா ? |
https://www.tnrd.tn.gov.in/externallyaidedprojects/Vazhndhukattuvom/skilltraininginstitutes/Tiruvallur.pdf |
தேசிய கல்விக் கொள்கை உயர் சாதியினருக்கு மட்டுமே பயனளிக்கும். | கல்விதான் சமூகநீதி மற்றும் சமத்துவத்திற்கான இலக்கை அடைவதற்கான ஒற்றை கருவி. கல்வி என்பது பொதுச் சேவை. தரமான கல்வியைப் பெறுவது, ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை என தேசிய கல்வி கொள்கை 2020-ல் கூறப்பட்டுள்ளது. | பிரிவு 6.1 |
தேசிய கல்வி கொள்கை மாநிலத்தை 2,000 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்லும் | ஃபின்லாந்து, கனடா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் உள்ள கல்விமுறைக்கு சமமானதாக தேசிய கல்விக்கொள்கை 2020 உள்ளது என சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். | https://www.sciencedirect.com/science/article/pii/S0149718924001174 |
தேசிய கல்வி கொள்கை மதிப்பீடு முறைகளால் மாணவர்கள் பள்ளி அளவிலேயே பல நிலைகளில் தரம் பிரிக்கப்படுவார்கள் | 5 மற்றும் 8 ஆம் வகுப்பு இறுதித்தேர்வுகளுக்கான மறுதேர்வு 2 மாதங்களில் நடத்தப்படும். இதனால், கல்வி தடைப்படாமல் மாணவர்களுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். | https://timesofindia.indiatimes.com/education/news/national-education-policy-nep-2025-whats-changed-and-whats-yet-to-come/articleshow/116804466.cms |
தேசிய கல்வி கொள்கை சமூகநீதி மற்றும் சமத்துவத்திற்கு எதிரானது. | கல்விதான் சமூகநீதி மற்றும் சமத்துவத்தை அடைவதற்கான ஒற்றை கருவி என தேசிய கல்வி கொள்கை கூறுகிறது. பன்மொழி கல்வி, கற்றல் திறனை மேம்படுத்துகிறது. பள்ளிகளில் இடைநிற்றலை குறைக்கிறது என யுனெஸ்கோ அமைப்பு கூறியுள்ளது. |
Section 6.1 |
தேசிய கல்வி கொள்கை, உயர் வகுப்பினருக்கு மட்டுமே சாதகமாகும். | அனைத்து குழந்தைகளும் எந்த வித வேறுபாடும் இல்லாமல் உலக தரத்திலான கட்டாய இலவச கல்வி கற்பதை உறுதி செய்து, சம வாய்ப்பு வழங்குவதே தேசிய கல்விக்கொள்கையின் நோக்கம். | பிரிவு 8.8 |