NEP 2020 தமிழ்
கல்வி என்பது பொதுச் சேவை. தரமான கல்வியைப் பெறுவது, ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை.
அடிப்படைக் கொள்கைகள்:
- a. மாணவர் ஒவ்வொருவரின் தனித்தன்மை வாய்ந்த திறன்களை அங்கீகரித்தல், அடையாளங்காணல் மற்றும் பேணி வளர்த்தல்.
- b. அடிப்படை எழுத்தறிவும், எண்ணறிவும் பெறுவதற்கு உயர் முன்னுரிமை அளித்தல்.
- c. பல்துறை மற்றும் முழுமையான கல்வித் திட்டம்.
- d. மாணவர்கள் தங்கள் எதிர்காலத் துறையைத் தேர்வு செய்யும் வகையில் கல்வித் திட்டத்தில் நெகிழ்வுத் தன்மை
- e. மனப்பாடம் செய்வதை விடுத்து, பாடத்தைப் புரிந்து கொள்வதை வலியுறுத்துதல்
- f. படைப்பாற்றலும், திறனாய்வுச் சிந்தனையும் வளர்த்தல்
- g. நன்னெறி, மனிதம் மற்றும் நற்பண்புகளை வலியுறுத்தல்
- h. கற்பித்தலிலும், கற்றலிலும் பன்மொழித் தன்மையும், மொழியின் ஆற்றலையும் பேணி வளர்த்தல்
- i. தகவல்தொடர்பு, கூட்டுறவு உள்ளிட்ட வாழ்க்கைச் செயல்திறன்களுக்கான கல்வி
- j. கற்பிப்பதிலும், கற்றலிலும் தொழில்நுட்பத்தின் விரிவான பயன்பாடு
- k. கல்வித் திட்டம், கற்பிக்கும் முறையில் உள்ளூர்ச் சூழல்களுக்கு மதிப்பளித்தல்
- l. பொதுக் கல்வி அமைப்பு முறையில் கணிசமான அரசு முதலீடு மற்றும் தனியார் மற்றும் சமூகத்தின் பங்களிப்பை ஊக்குவித்தல்.
சிறப்புச் செயல் திட்டங்கள்
1. முன் குழந்தைப் பருவ கவனிப்பும், கல்வியும்: கற்றலின் அடித்தளம் (Early Childhood Care and Education (ECCE): The Foundation of Learning)
- 1.2 அனைத்து குழந்தைகளுக்கும், எழுத்தறிவு, எண்ணறிவு, உட்புற, வெளிப்புற விளையாட்டு, இசை, கலைகள் முதலானவற்றை உள்ளடக்கிய தரமான மழலையர் கல்வி (Pre KG, LKG, UKG)
2. அடிப்படை எழுத்தறிவும், எண்ணறிவும்: கற்றலுக்குத் தேவையான அவசர மற்றும் அவசியமான முன்தேவைப்பாடு. (Foundational Literacy and Numeracy: An Urgent & necessary Prerequisite to Learing)
- 2.2 அடிப்படை எழுத்தறிவையும், எண்ணறிவையும் அனைத்துக் குழந்தைகளும் பெறுதலைக் கண்காணிக்க தேசியச் சேவை இயக்கம் நிறுவப்படும்.
- 2.3 ஆசிரியர் காலியிடங்கள் விரைவாக நிரப்பப்படும். உள்ளூர் ஆசிரியர்களை நியமிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும். ஆசிரியர் மாணவர் விகிதம், 1:30 க்குக் கீழ் உறுதி செய்யப்படும். சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளில், 1:25 க்குக் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
- 2.8 இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்கள், பள்ளி மற்றும் உள்ளூர் நூலகங்களில் கிடைக்கும்படி, நூலக வசதிகள் பரவலாக்கப்படும்.
3. இடை நிற்றல் வீதத்தைக் குறைத்தல் மற்றும் எல்லா நிலைகளிலும் முழுமையான கல்வி அணுகுமுறையை உறுதிசெய்தல் (Curtailing Dropout Rates and Ensuring Universal Access to Education at All Levels)
- 3.2 இடைநின்றுபோன குழந்தைகளைப் பள்ளிக்கு மீண்டும் கொண்டுவரவும், இடை நிற்றலிலிருந்து குழந்தைகளை மேற்கொண்டு தடுப்பதற்கும், பள்ளிகளைத் தரமுயர்த்துதல், பள்ளிகள் இல்லாத பகுதிகளில் தரமான பள்ளிகளைக் கட்டுதல், புத்தாக்கக் கல்வி மையங்கள் அமைத்தல், பயனுள்ள, போதுமான உள்கட்டமைப்பு ஏற்படுத்துதல்.
- 3.3 கற்றல் நிலையையும், மாணவர்களையும் தொடர்ந்து கண்காணித்து, விடுபட்ட குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வரும் வாய்ப்புகளை உருவாக்குதல்.
- 3.5 பள்ளி செல்ல இயலாத இளைஞர்கள் கற்றல் தேவைகளை எதிர்கொள்ள, திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கல்வித் திட்டங்களை வலுப்படுத்தல்.
4. பள்ளிகளில் பாடத்திட்டமும், கற்பிக்கும் முறையும்.:
- 4.2 மாணவர்களின் வெவ்வேறு வயதினை அடிப்படையாகக் கொண்டு, அங்கன்வாடி முதல் 12 ஆம் வகுப்பு வரை, 3 – 8 வயது, 8 – 11 வயது, 11 – 14 வயது, 14 – 18 வயது என, அடித்தள நிலை, ஆயத்த நிலை, நடுநிலை, இடைநிலை என, கல்வி நிலைகள் வகைப்படுத்தப்பட்டு, ஒருங்கிணைந்த முழுமையான கல்வி முறை கொண்டு வரப்படும்.
- 4.4 மாணவர்களின் முழு நிறைவான வளர்ச்சி (Holistic Development of Learners)
- 4.5 பாடத்திட்டத்தின் உள்ளடக்கத்தைக் குறைத்து, இன்றியமையாத கற்றலையும், திறனாய்வுச் சிந்தனையையும் மேம்படுத்தல் (Reduce Curriculum Content to Enhance essential Learning and Critical Thinking)
- 4.6 பட்டறிவு (அனுபவ) வழிக் கற்றல் (Experiential Learning)
- 4.9 பாடப்பிரிவைத் தேர்ந்தெடுப்பதில், மாணவர்களுக்கு அதிகாரமளிக்கும் நெகிழ்வுத் தன்மை (Empower Students through Flexibility in Course Choices)
பன்மொழித் தன்மையும், மொழியாற்றலும் (Multi-lingualism and the Power of Language)
- 4.11 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி, எட்டாம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்விக்கு முன்னுரிமை.
- 4.12 இந்திய அரசமைப்பின் எட்டாம் இணைப்புப் பட்டியலில் கூறப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் பெரும் எண்ணிக்கையில் மொழி ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை. மாநிலங்களிடையே மொழி ஆசிரியர்களைப் பணியமர்த்த இரு தரப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள ஊக்குவித்தல்
- 4.18 தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய செம்மொழிகளின் இலக்கியங்களைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்ல, பள்ளிகளில் விரிவாகக் கிடைக்கும்படி செய்யப்படும்.
- 4.20 பள்ளிகளில் இந்திய மொழிகள் மட்டுமல்லாது, ஆங்கிலம், கொரிய மொழி, ஜப்பானிய மொழி, தாய், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் மொழி, ரஷ்யன், போர்ச்சுகீஸ் என அயல்நாட்டு மொழிகளும், உயர் பள்ளி அளவில் கற்றுத் தரப்படும்.
- 4.22 மாற்றுத் திறன் படைத்த மாணவர்கள் பயனடையும்படி, பள்ளிகளில் இருந்தே இந்திய சைகை மொழி கற்பித்தல்
- 4.25 செயற்கை நுண்ணறிவு, எந்திர வழிக் கற்றல், தரவு அறிவியல் ஆகியவற்றுக்கான அடிப்படை அறிமுகம், நடுநிலைப் பள்ளி அளவில் தொடங்குதல்.
- 4.27 பரிமாற்று நிகழ்ச்சித் திட்டங்களின் பகுதியாக, மாணவர்கள் வெவ்வேறு மாநிலங்களுக்குச் சென்று பார்வையிட ஊக்குவித்தல்.
- 4.28 மனநலம், ஊட்டச்சத்து, பேரிடர் எதிர்வினை, முதலுதவி, வருமுன் காத்தல், போதைப் பொருள் விளைவுகள் குறித்த பாடத்திட்டங்கள் உருவாக்குதல்.
5.2 ஆசிரியர்கள் பணியில் ஊரகப் பகுதி இளைஞர்கள் இணைவதை ஊக்கப்படுத்துதல். தரமான நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த இளநிலைக் கல்வியியல் (பி.எட்) படிப்புக்காக, நாடு முழுவதும் படிப்பு உதவித் தொகைகள் நிறுவுதல்.
5.9 பள்ளிகளில், செயற்படும் கழிப்பறைகள், தூய்மையான குடிநீர், விளையாட்டு மைதானங்கள், மின்சார வசதி, கணினி வசதி, வலைத்தளங்கள், நூலகங்கள், விளையாட்டு வசதி, பொழுதுபோக்கு வசதி மற்றும் பாதுகாப்பான உட்கட்டமைப்பு உருவாக்குதல்.
5.21 பள்ளிகளில், தகுதி வாய்ந்த தனிச் சிறப்புக் கல்வியாளர்கள் (Special Educators) நியமனங்கள்
6.9 தங்கும் விடுதி வசதியுடன் நவோதயா பள்ளிகள், பெண் குழந்தைகளுக்காக கஸ்தூரிபாய் காந்தி பாலிகா பள்ளிகள், கேந்திரிய வித்யாலயாக்கள், நாடு முழுவதும் கட்டப்படும்.