puthiyakalvi
0%

தேச முன்னேற்றத்திற்காக தேசிய கல்விக் கொள்கையை ஊக்குவிக்கவும்

தரமான கல்வி, இந்தியாவின் அறிவியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு வலிமைக்கான அடித்தளமாக இருக்கும் என்பதால், தேசிய கல்விக் கொள்கையை ஆதரிக்கவும்.

மின்கையெழுத்து

கையொப்பமிட இங்கே கிளிக் செய்யவும்

6LfaMuUqAAAAAFVFW1kYiEiVn9-aHLHOvPb8b0cN

சமர்ப்பிப்பதன் மூலம், அனைவரையும் உள்ளடக்கிய, சிறந்த, மற்றும் ஒருங்கிணைந்த கல்வி முறையான தேசிய கல்விக் கொள்கையை வரவேற்பதோடு, அதனைச் செயல்படுத்துவதையும் முழுமையாக ஆதரிக்கிறேன்.

NEP 2020 க்கு பொதுமக்களின் ஆதரவு

தேசிய கல்விக்கொள்கை குறித்து தலைவர்களின் கருத்து

தேசிய கல்விக்கொள்கை குறித்த தலைவர்கள் கருத்துகளை பகிர்ந்து, அதன் தாக்கம், சவால்கள் மற்றும் இந்தியாவின் எதிர்காலக் கல்வி குறித்து விவாதிக்கின்றனர்.

திரு. நரேந்திர மோடி

Thiru. Narendra Modi

மாண்புமிகு பாரதப் பிரதமர்

“தேசிய கல்விக் கொள்கை, தாய்மொழி வழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதால், கிராமப்புற, ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்புக்குப் பலனளிப்பதாகவும் அமையும். நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும், சமக்கல்வியும், சமமான வாய்ப்பும் கிடைக்கவேண்டும் என்பதே தேசிய கல்விக்கொள்கையின் நோக்கம்.”

திரு. அமித் ஷா

Thiru. Amit Shah

மாண்புமிகு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர்

“தமிழகத்தில், தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு, தொழில்நுட்பக் கல்வியில், 1,350 கல்வி இடங்கள் உள்ளன. ஆனால், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (AICTE) வழங்கியுள்ள தரவுகளின்படி, 50 மாணவர்கள் மட்டுமே தமிழ் வழிக் கல்வித் திட்டத்தில் இணைந்துள்ளனர். தமிழக அரசு, தொழில்நுட்பம் மற்றும் மருத்துவக் கல்வியைத் தமிழ் வழியில் பயிற்றுவிக்க முன்வந்தால், அது தமிழ் மொழிக்குச் செய்யும் பெரும் சேவையாக அமையும்.”

திரு. தர்மேந்திர பிரதான்

Thiru. Dharmendra Pradhan

மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர்

“தேசியக் கல்விக் கொள்கை, எந்த மொழியையும் திணிக்கவில்லை. அதை வைத்து தமிழகத்தில், பொய்ப் பரப்புரை நடக்கிறது. தமிழக மாணவர்கள் பல மொழிகளைக் கொண்ட கல்வியைக் கற்பதில், என்ன தவறு இருக்கிறது?”

திரு.எல்.முருகன் அவர்கள்

Thiru. L. Murugan

மத்திய தகவல் - ஒலிபரப்புத் துறை இணையமைச்சர்

“மும்மொழி கொள்கையில் எந்த இடத்திலும் இந்தி கட்டாயம் எனக் கூறவில்லை.1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தாய்மொழியை ஊக்குவிப்பது தான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். ஒரு குழந்தை எந்த மொழி, எத்தனை மொழி படிக்க வேண்டும் என்பது குழந்தையின் உரிமை. இதை எதிர்ப்பதற்கு முதல்வருக்கு என்ன அதிகாரம் உள்ளது. ”

திரு. கே. அண்ணாமலை

Thiru. K. Annamalai

தமிழக பாஜக மாநிலத் தலைவர்

“தனியார் பள்ளிகளில் படிக்கும் வசதி படைத்த மாணவர்களுக்கு வழங்கப்படும் மும்மொழி கொள்கை கல்வி, அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு மறுக்கப்படுவது ஏன் ?”

திரு. பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள்

Thiru. Pon. Radhakrishnan

தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர்

“மூன்றாவது மொழியை கற்று கொடுக்க மாட்டோம் என்ற நிபந்தனையை எந்த திமுகவினராவது தாங்கள் துவங்கிய தனியார் பள்ளியில் விதித்ததுண்டா ? தமிழை வைத்து பிழைப்பு நடத்த வேண்டுமென்று யார் நினைத்தாலும் அது ஏற்றுக்கொள்ள முடியாதது. ”

திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள்

Thirumathi. Tamilisai Soundararajan

தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர்

“தனியார் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை கடைபிடிக்கும் திமுக அரசு, எதற்காக அரசுப் பள்ளிகளில் கடைபிடிப்பதில்லை ? தாய்மொழி தமிழை தான் பிரதானமாக கற்பிப்போம் என தேசிய கல்வி கொள்கை கூறுகிறது. அரசியல் காரணத்திற்காகவே இதை எதிர்க்கிறார்கள்.”

விளம்பரத்தட்டிகள்

தேசியக் கல்விக் கொள்கை 2020 குறித்துப் பொதுமக்கள் கருத்து

மும்மொழிக் கொள்கையின் தாக்கம், நன்மைகள் குறித்து, பொதுமக்களின் பல்வகை கருத்துக்களை காணுங்கள்.

சுயலாபத்திற்காக, தேசிய கல்விக் கொள்கையில் பொய்ப் பிரச்சாரம் செய்யும் தலைவர்கள்

தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியில் தங்கள் சொந்த நலனுக்காக சூழ்ச்சி செய்யும் தலைவர்கள்

திரு. மு.க. ஸ்டாலின்

Thiru M.K Stalin

தமிழக முதலமைச்சர் திமுக கட்சியின் தலைவர்

அரசுப் பள்ளிகளில் மட்டும் திமுக இருமொழிக் கொள்கையை பின்பற்றுவது ஏன்?

“அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொருந்தும்படியாக இருந்தால்தான் அது ஒட்டுமொத்த மாநிலத்தின் கொள்கையாக ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை, பணமிருப்பவர்கள் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால், ஏழை எளிய மக்களுக்கு, இரண்டு மொழிகளுக்கு மேல் கற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படாது என்பதே, திமுக கூறும் இரண்டு மொழிக் கொள்கை.

முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களது மகள் முதற்கொண்டு, திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் எல்லாம், பல மொழிகள் கற்றுக் கொடுக்க லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும்போது, அவற்றை அரசுப் பள்ளிகளிலேயே இலவசமாகக் கற்றுக் கொடுக்க எப்படி அனுமதிப்பார்கள். தன் குடும்பம், தன் கட்சியினர் நலனுக்காக, தமிழக ஏழை, எளிய மாணவர்கள் எதிர்காலத்தோடு விளையாடிக் கொண்டிருக்கிறார் திரு. ஸ்டாலின்.”

திரு தொல். திருமாவளவன்

Thiru Thol. Thirumavalavan

விசிக தலைவர்

திமுகவின் அழுத்தம் காரணமாக, திருமாவளவன் புதிய கல்விக் கொள்கையில் இரட்டை வேடம் போடுகிறாரா?

“ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகள் பயிற்றுவிக்கும் ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளியின் நிர்வாகக் குழுத் தலைவராக இருக்கும் விசிக தலைவர் திரு. திருமாவளவனும், தமிழகத்தில் இரண்டு மொழிக் கொள்கை என்று இரட்டை வேடம் போடுகிறார்.

ஏழை எளிய மக்களுக்காகப் போராடுகிறேன் என்று கூறி, திமுகவின் ஊதுகுழலாகவே மாறியிருக்கும் திரு. திருமாவளவன் அவர்கள், தான் நடத்தும் தனியார் பள்ளியில், தமிழக அரசின் பாடத்திட்டத்தின்படி ஏன் இரண்டு மொழிக் கொள்கையைப் பின்பற்றவில்லை? தனது பள்ளியில், பல ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்து கற்றுக் கொடுக்கும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளை, ஏழை, எளிய மாணவர்களுக்கு, அரசுப் பள்ளிகளில் இலவசமாகவே பயிற்றுவிக்கும் மும்மொழிக் கொள்கையை ஏன் எதிர்க்கிறார்? தான் நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு இடம் இல்லாமல் போய்விடும் என்பதாலா?”

திரு. எஸ். சீமான்

Thiru S. Seeman

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்

உங்கள் மகனை சி.பி.எஸ்.இ பள்ளியில் பல மொழிகளில் படிக்க வைக்கும்போது, மற்றவர்களுக்கு அதே வாய்ப்பை ஏன் மறுக்க முயற்சிக்கிறீர்கள்?

“தன் மகன்கள் தமிழ் படிக்க இங்கு பள்ளிகள் இல்லாததால், இருவரும் தனியார் பள்ளியில் ஆங்கில வழியில்தான் படிக்கிறார்கள் என்று பெருமையுடன் கூறிக் கொள்ளும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள், ஏழை, எளிய தமிழக மக்களின் குழந்தைகளுக்கு கட்டாய தமிழ் மொழிக் கல்வியோடு, ஆங்கிலமும் மற்றுமொரு இந்திய மொழியும், அரசுப் பள்ளிகளில் இலவசமாகக் கற்க வாய்ப்பு வழங்கும் புதிய கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்கிறார்?

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால், தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் தாய்மொழிக் கல்வி கட்டாயமாகிவிடுமே. அவரது மகன்கள் எந்தப் பள்ளியில் வேண்டுமானாலும் சேர்ந்து தமிழ் படிக்கலாமே. நியாயமாக, அவர் இதனை வரவேற்கத்தானே செய்ய வேண்டும். தனது மகன்களுக்குக் கிடைக்கும் கல்விக்கான சம வாய்ப்பு, ஏழை, எளிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என்பதுதான் அவரது எண்ணமா?”

திரு சி. விஜய்

Thiru C. Vijay

தவெக தலைவர்

விஜய் தான் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளியில் பல மொழிகளைக் கற்க அனுமதிக்கும் போது, ​​ஏன் அது அரசுப் பள்ளிகளுக்கு பொருந்தாது?

“தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும் ஹிந்தி எதிர்ப்பு இரட்டை வேட அரசியல் கட்சிகள் போதாது என்று, புதியதாக வந்திருக்கிறார் த.வெ.க. தலைவர் திரு. விஜய் அவர்கள். தான் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளியின் பெயரையே விஜய் வித்யாஷ்ரமம் என்று சமஸ்கிருதத்தில் வைத்துக் கொண்டு, இரண்டு மொழிகள்தான் தமிழகக் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

திரு. விஜய் அவர்கள் குழந்தைகள், அவர் நடத்தும் விஜய் வித்யாஷ்ரமம் சிபிஎஸ்இ பள்ளியில் பல ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்திப் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் பல மொழிகள் கற்கும் வாய்ப்பு கிடைக்கையில், அதே கல்வியை, தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு கிடைக்கவிடாமல் அவர் எதிர்ப்பது ஏன்? குறைந்தபட்சம், அவரது த.வெ.க. தொண்டர்களின் குழந்தைகளுக்காவது, பல மொழிகள் கற்கும் வாய்ப்பு கிடைக்குமே. அதனை ஏன் தடுக்கிறார்?”